மூடித் திரை இருக்கமுன் அமர்ந்து நாம் இருக்க
வேடிக்கை காட்டவேன்று வித விதமாய் உடை அணிந்து
காசு பணம் பார்க்கவேன்று பிழைப்பாய் மாற்றிக் கொண்டு
அகம் எண்களும் காயங்களாகி, முகம் எல்லாம் ஜாலங்கள் கொண்டு
விழி வழியும் நீர் கூட பணமாக மாறும் என்று
அவன் போடும் கோலத்தில் ஆடிப்போகிறது
விதி ஆட்டும் நேரம் கூட மதி கொண்டு அவன் வாழ
சதி செய்து போகிறார் இந்த மதியற்ற மானுடங்கள்
திரையிலே அவன் கோலம் சிரித்திருக்கும் மக்கள் கூட்டம்
வேடம் கலைக்க முனைகையிலே – முற்றத்து மல்லிகையாய்
சிரிப்புடன், வியந்து ஓயாத கண்களுடன்
பாரின் பார்வை அறியா பாலகர்கள் விடுமுறையின் ஓர் நாளை
நினைவுகளை கால ஏட்டில் பதிக்கவென்று
வேடத்துக்கும் வேடமிட்ட அவன் அருகே சேர்ந்த நிற்க
நிகழ்படமும் புகைப்படமாய்..
காயங்கள் பல மறந்து சிரிக்கும் பாலரை அணைத்திருக்கும் கைகளுக்கோ
கவலைகள் மரத்து வாழ்க்கையே வேறுத்து
சுழற்சியின் ஓர் நிகழ்வாய் ஓர் புன்னகை, ஆளியின் வெளிச்சம் போல..
வந்து விட்டு போகிறது…
வேடங்கள் கலைந்த பின்னே அவன் சோகங்களும் மறைந்திடுமோ?

Winning Article – Tamil
Click 2022 – Creative Writing Competition
Organized by the Editorial Avenue of RACUOK