Rotaract Club of University of Kelaniya
⌕
Creative articlesதமிழ்

தேடல்

அன்பு கொண்ட தேடல்கள், அவமானம் பெறும்.. அம்பின் தேடல்களோ, அடுத்தவன் உயிர் பெறும்.. இரவின் தேடல்கள், விடியலை பெறும்.. இலக்கண தேடல்கள், இலக்கியம் பெறும்… கவிஞனின் தேடல்கள், காப்பியம் பெறும்.. கல் கொண்ட தேடல்கள், சிற்பம் பெற

S
By Senara Sudasinghe · 1 min read

அன்பு கொண்ட தேடல்கள்,

அவமானம் பெறும்..

அம்பின் தேடல்களோ,

அடுத்தவன் உயிர் பெறும்..

இரவின் தேடல்கள்,

விடியலை பெறும்..

இலக்கண தேடல்கள்,

இலக்கியம் பெறும்…

கவிஞனின் தேடல்கள்,

காப்பியம் பெறும்..

கல் கொண்ட தேடல்கள்,

சிற்பம் பெறும்..

கலவி கொள்ளும் தேடல்கள்,

உச்சம் பெறும்..

காதல் கொள்ளும் தேடல்கள்,

கண்ணீர் பெறும்

சிற்பி கொண்ட தேடல்கள்,

சிலையை பெறும்..

சிலந்தி கொள்ளும் தேடல்கள்,

வலையை பெறும்..

சிப்பியின் தேடல்கள்,

முத்தை பெறும்..

சிற்றெறும்பின் தேடல்கள்,

சக்கரை பெறும்…

தனக்குள் எழும் தேடல்கள்,

ஞானம் பெறும்..

தவம் கொண்ட தேடல்கள்,

வரத்தை பெறும்..

பார் கொள்ளும் தேடல்கள்,

மழையை பெறும்..

பல்லவியின் தேடல்கள்,

சரணம் பெறும்..

Share this articleWhatsApp   Facebook   Copy link

Related articles