Rotaract Club of University of Kelaniya
⌕
Updatesதமிழ்

மாதாந்த புதுப்பிப்பு – செப்டம்பர் 2021

Community Service avenue, Club Service avenue, International Service avenue, Sports and Entertainment avenue, Public Relations அணி மற்றும் Member Relations ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட செயற்றிட்டங்களுடன் 2021-22 காலத்

r
By rcuok20152016@gmail.com · 2 min read

Community Service avenue, Club Service avenue, International Service avenue, Sports and Entertainment avenue, Public Relations அணி மற்றும் Member Relations ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட செயற்றிட்டங்களுடன் 2021-22 காலத்திற்கான செப்டம்பர் மாதம் ஆரம்பமானது.

நிபுணர்கள் நடத்திய தொடர் அமர்வுகள் மூலம் மன அழுத்தம், கவலை மற்றும் உளவியல் சார்ந்த மன அழுத்தம் தொடர்பான கோளாறுகளால் தவிக்கும் மனதிற்கு ஆறுதல் வழங்கும் நோக்கத்துடன் Community Service avenue ‘HearMe’ செயற்றிட்டத்தின் மூலம் முதல் படி எடுத்து வைத்தது. மேலும் தொழில்முறை உதவி தேவைப்படுபவர்கள் அதற்கு உரிய வளங்களுக்கு அனுப்பப்படுவதையும் இந்த செயற்றிட்டம் உறுதி செய்தது. இதற்கிடையில், Club Service avenue எங்கள் சோர்வான மற்றும் சலிப்பான பல்கலைக்கழக நடைமுறைகளை உடைப்பதற்காக, செப்டம்பர் 17 ஆம் திகதி ‘Rota Sonduru Sajje’யின் குணப்படுத்தும் இசை மற்றும் ஆத்மார்த்தமான பாடல்களுடன் எமக்கு மிகவும் தேவையான நிவாரணம் அளித்தது. International Service avenue ‘Athena’ செயற்றிட்டத்தை ஆரம்பித்தது; மகளிர் அதிகாரமளித்தல் குறித்த ஒரு பத்திரிகை, 200+ கட்டுரைகளுடன் உள்ளீடுகளை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி கட்டத்தை அடைந்தது. மேலும் RACUOK ‘Nightscape’-திறந்த நிகழ்ச்சி உடன் கைகோர்த்தது. இது உலகம் முழுவதிலுமிருந்து பல கழகங்களுடன் இணைந்து நடாத்திய ஒரு கூட்டு நிகழ்வாகும்.

தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் உறுப்பினர்களான திரு. குமார் தர்மசேன மற்றும் திரு. ரங்கனா ஹேரத் ஆகியோரின் அற்புதமான இன்னிங்ஸை நினைவுபடுத்தும் வகையில் இரண்டு அமர்வுகளை உள்ளடக்கிய விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அவென்யூவிள் புத்தம் புதிய தொடரான ​​’Middle Stump’ தொடங்கப்பட்டது. செப்டம்பர் 16 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த இரண்டு மெய்நிகர் அமர்வுகள் சக கிரிக்கெட் பிரியர்களுக்கு ஒரு விருந்து. பப்ளிக் ரிலேஷன்ஸ் குழு மற்றொரு தளத்தை அறிமுகப்படுத்தியது – ‘TikTok’, மற்றும் முதல் இரண்டு டிக்டோக்குகள் எங்கள் அன்பான Directors குழுவின் வெளிப்படுத்தப்படாத பிரகாசமான, துடுக்கான பக்கங்களை வெளியிட்டன. இதற்கிடையில், உறுப்பினர் உறவுகள் குழு அவர்களின் புதிய முயற்சியில் ஈடுபட்டது; செப்டம்பர் முழுவதும் ‘AvoiDelta’ செல்ஃபி போட்டி. சக உறுப்பினர்களின் உற்சாகமான பங்கேற்பு திட்டத்தின் முதல் பாதி முழுவதும் மிகவும் தெளிவாக இருந்தது, இது ஒரு மாபெரும் இசை இரவுடன் முடிந்தது.

செப்டம்பர் மாதத்திற்கான RACUOK இன் மாதாந்திர பொதுக் கூட்டம் 29.09.2021 தினம் நடைபெற்றது. குறிப்பிடத்தக்க தருணங்களை இயக்குநர் குழு மீண்டும் நினைவ்வுகூரப்பட்டதுடன், பல முக்கிய செய்திகள் கழகத்தின் சக ரோட்டராக்டர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. அனைவரும் ஆவலுடன் காத்திருந்த தருணத்துடன் கூட்டம் நிறைவுற்றது. அது ஆகஸ்ட் மாதத்தில் கழகத்தின் சிறந்த முறையில் பங்களித்த இயக்குநர்கள் மற்றும் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்ட அந்த மாத உறுப்பினர்களின் அறிவிப்பு. உறுப்பினர்கள் பின்வருமாறு.

இந்த அனைத்து அங்கீகாரங்கள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்களுடன், மற்றொரு சிறப்பான அங்கீகாரத்தைக் காண RACUOK ஆசிர்வதிக்கப்பட்டது. அது என்னவென்றால் எங்கள் சொந்த கழகத் தலைவர்  Rtr. கிசல் ஏகநாயக்க செப்டம்பர் மாதத்திற்கான ‘மாதத்தின் தலைவர்’ ஒருவராக அறிவிக்கப்பட்டார்.

மொத்தத்தில், செப்டம்பர் மாதம், 2021-22 காலத்தின் கிட்டத்தட்ட கால் பகுதி முடிவதேய்ந்ததுள்ள நிலையில், அதன் பாரம்பரியம் மற்றொரு புதிய மாதத்தை எதிர்பார்த்து பல புதுமையான முயற்சிகளுடன் தொடரும் என்ற  திருப்தியுடன் அதன் முடிவை எட்டியது.

~Translated by; Co-editor Rtr. Fathima Rifka, Rtr. Rahma Zuhri, Rtr. Munsifa Munzir~

Share this articleWhatsApp   Facebook   Copy link
r
rcuok20152016@gmail.com

See all articles by this author

Related articles

Updates
தமிழ் · 2 min read

மாதாந்த புதுப்பிப்பு – 2022

சமூகம் மற்றும் சக உறுப்பினர்களுக்கு நன்மை பயக்கும் தெளிவான கூறுகளை மையமாகக் கொண்ட பல முன்முயற்சிகளுடன், களனிப் பல்கலைக்கழகத்தின் ரோட்டராக்ட் கழகம், ரோட்டராக்ட் நாட்குறிப்பில் மற்றொரு அற்புதமான அத்தியாயத்தை வெற்றிகரமாக வர

By rcuok20152016@gmail.com · 9 Jun 2022
Updates
සිංහල · 2 min read

මාසික යාවත්කාලීන – අප්‍රේල් 2022

කැලණිය විශ්වවිද්‍යාලයීය රොටරැක්ට් සමාජය විසින් රොටරැක්ට් දිනපොතේ තවත් අපූරු පරිච්ඡේදයක් සාර්ථකව ලියා නිම කරන ලද්දේ ප්‍රජාව වෙනුවෙන් සහ සහෝදර සාමාජිකයින් වෙනුවෙන් බොහෝ ප්‍රයෝජනවත් අන්දමේ විචිත්‍ර අංග කෙරෙහි අවධානය යොමු කර

By rcuok20152016@gmail.com · 9 Jun 2022
Updates
English · 2 min read

Monthly Update April- 2022

The Rotaract Club of University of Kelaniya successfully drafted another amazing chapter in the Rotaract diary with a number of initiatives that focused on vivid elements of benefiting the community and fellow members. T

By rcuok20152016@gmail.com · 9 Jun 2022