You are currently viewing நத்தார் காலத்தின் விலைமதிப்பற்ற பரிசு!

நத்தார் காலத்தின் விலைமதிப்பற்ற பரிசு!

நத்தார் காலம் என்பது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிறைந்த ஒரு பொற் காலம். நம்மை சுற்றியுள்ள அன்பானவர்களுக்கு நன்றி சொல்லும் நேரம் இது. சுற்றியுள்ள அன்பானவர்களிடம் இருந்து பரிசுகள் பெறுவது, அவர்களுக்காக பரிசுகளை வாங்குவது என நாம் மிக்க மகிழ்ச்சியுடன் இந்த நாட்களை கொண்டாடுகிறோம்.

ஆனால், நத்தாரின் மிக விலைமதிப்பற்ற பரிசு வெளிப்புற அலங்காரங்கள் அல்ல. அது நம் இதயத்திலிருந்து பிறக்கின்ற அன்பும் பரிவும் தான். இந்த நத்தாரில், நாம் அன்புக்காக ஏங்கிக் காத்திருக்கும் உள்ளங்களை நாடிச் சென்று அவர்கள் மனதை மகிழ்ச்சியால் நிரப்பி விலைமதிப்பற்ற பரிசை வழங்குவோம்.

சமூகத்தின் பராமரிப்பற்ற அநாதைக் குழந்தைகள், பெற்றோரின் அன்பை அனுபவிக்க முடியாதவர்களாக இருக்கலாம். ஒரு சிறிய பரிசு, ஒரு  சிறிய புன்னகை அல்லது அவர்களுடன் நேரத்தை செலவிடுவது, அவர்களது இதயங்களை மகிழ்ச்சியால்  நிரப்பி அவர்களது வாழ்வில் நீங்கள்  ஒளி சேர்க்கும் வாய்ப்பாகும். 

எனவே, சுயநலமற்ற உங்கள் கருணை உள்ளம் அவர்களுக்கு உங்கள் அன்பை உணர்த்தும்.

இந்த நத்தாரில், உங்கள் இதயத்தின் நிறைவான புன்னகையையும் அன்பையும் பகிருங்கள். அது மட்டும்தான் நத்தார் காலத்தின் உண்மையான, விலைமதிப்பற்ற பரிசு.

இந்த ஆண்டின் நத்தார் பண்டிகையை மற்றவர்களுக்கு நினைவில் நிற்கும் ஒரு தருணமாக மாற்றுங்கள்!

Leave a Reply