You are currently viewing இயற்கையின் பாடம்

இயற்கையின் பாடம்

பூமி தனியாக அல்ல, மற்ற ஏழு கிரகங்களுடன் சூரியனைச் சுற்றி வருகிறது. ஒவ்வொரு கிரகத்திற்கும் அதை சார்ந்த நிலவுகள் உள்ளன. மேலும் பிரம்மாண்டமான விண்வெளியில் விண்கற்கள், சிறுகோள்கள், குறுங்கோள் மற்றும் பல அற்புதமான கூறுகள் உள்ளன. ஒவ்வொரு கூறுக்கும் அதற்கான தனித்துவமான பாத்திரம் உள்ளது. சூரியன் கோள்களை விழ விடாமல் இறுகப் பிடித்துக் கொண்டு தன்னை நோக்கி இழுத்துக் கொள்கிறது. பூமி சந்திரனை விண்மீன் மண்டலத்தில் தொலைந்து போக விடாமல் வைத்திருக்கிறது.

என்ன ஒரு அற்புதமான நட்புறவை அவர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கிறார்கள்?

இயற்கை அனைத்து உயிரினங்களுக்கும் ஓர் அற்புதமான பரிசு வழங்குபவராக இருக்கிறது. பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் வால்வதற்கு தேவையான அனைத்தையும் இயற்கை வழங்குகிறது. உணவு மற்றும் தண்ணீர், தங்குமிடம், காற்று, மரங்கள் மற்றும் ஏராளமான வளம்கலை எமக்கு வழங்குகிறது. இயற்கை அன்னை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் அன்பும் பாசமும் ஒருபோதும் முடிவடைவதில்லை. பதிலுக்கு எம்மிடம் எதை எதிர்பார்க்கப்படுகிறது? பூமியில் மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தவிர வெறொன்றும் எதிர்பார்க்கவில்லை.

தன்னலமின்மை பற்றி எவ்வளவு பெரிய பாடத்தை புகட்டறிகிறது?

நிலவு இருளை விரட்டியடித்து ஒளியை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கிறது. சூரியன் தன் கதிர்களை தன் அன்பு நண்பன் சந்திரனுடன் பகிர்ந்து கொள்கிறது. சந்திரன் அதை நம்மோடு பகிர்ந்து கொள்கிறது! ஒரு நாள் கூட தவிர்க்காமல், ஒவ்வொரு நண்பகல் மற்றும் இரவும் இப் பகிர்வு மற்றும் அக்கறையின் செயல் தொடர்கிறது.

பகிர்தல் மற்றும் அக்கறையை பற்றி கூறும் என்ன ஒரு அற்புதமான செயல்?

காலையில் பூக்கும் அழகான பூக்கள், நாள் முழுவதும் நறுமணம் பரப்பி, தன் வண்ணங்களால் சுற்றுச்சூழலை அழகுபடுத்தி, நிலா வானில் தோன்றும் வெளேயில், மெதுவாக தரையில் விழுகிறது. பூக்கள் ஓர் குறுகிய ஆயுட்காலத்தை மரபுரிமையாகப் பெற்றாலும், உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதற்கு அதின் பங்களிப்பை வழங்குவதன் மூலம் வாழ்க்கையின் அர்த்தத்தை முழுமைப்படுத்துகிறது.

இந்நிகழவு வாழ்க்கையைப் பற்றி என்ன ஓர் அற்புதமான அர்த்தத்தை விளக்குகிறது?

இருள் இரவை வென்றாலும், இருளைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கண் சிமிட்டும் சிறிய நட்சத்திரங்கள், தங்கள் சிறிய விளையாட்டுத்தனமான இரும்பினால் வானத்தை வெல்கிறது. சவால் பெரிதாக இருந்தாலும், தங்களிடம் உள்ள சிறிய ஒளியின் மூலம் அவர்கள் இரவை அவர்களின் சொந்த ராஜ்யமாக மாற்றுகிறார்கள்.

நம்மிடம் உள்ள சிறிய வெளிச்சத்தை பயன்படுத்தி சவால்களை எதிர்கொள்வதை பற்றி என்ன ஓர் அற்புதமான செய்தி?

இயற்கையானது வாழ்க்கையின் அற்புதமான ஆசிரியர் ஆகும். பகிர்வு, அக்கறை, அன்பு மற்றும் பாசத்துடன் நாம் செலவிடும் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியுடன் வால்வதை பற்றியும், சவால்களை எதிர்கொள்ளவதை பற்றியும் உலகம் உரத்த குரலில் எதிரொலிக்கிறது!

This Post Has One Comment

  1. Kaveesha

    ❤❤

Leave a Reply