You are currently viewing ஈரநிலங்களின் முக்கியத்துவம்

ஈரநிலங்களின் முக்கியத்துவம்

உலகின் உற்பத்தித்திறன் கொண்ட இயற்கை சுற்றுச் சூழல் தொகுதிகளில் ஈரநிலங்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. மழைக்காடுகள் மற்றும் முருகைக்கற்பாறைகளுடன் ஒப்பிட கூடிய அளவிற்கு பிரதான பங்கை வாகிக்கின்றன. ஈரநில சூழற்தொகுதியில் பல்வேறு வகையான நுண்ணங்கிகள், தாவரங்கள், பூச்சிகள், ஈரூடகவாழிகள், ஊர்வன, பறவைகள், மீன்கள் மற்றும் பாலூட்டிகள் என்பன காணக்கூடியாதாக உள்ளது. காலநிலை, தரைத்தோற்ற வடிவம், புவியியல் மற்றும் நீரின் இயக்கம் என்பன ஈரநில சூழற்தொகுதியில் வாழும் அங்கிகளை தீர்மானிக்கின்றது. ஈர நிலங்கள் உயிரியல் பல்பொருள் அங்காடிகளாக கருத்தப்படுகின்றன. இந்த சூழல் தொகுதி ஆனது பல்வேறு உயிரினங்களை ஈர்க்கும் அளவிற்கு பெரிய அளவிலான உணவினை வழங்கும் தொகுதிகளாக செயற்படுகின்றன.

ஈரநிலங்கள் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த சூழற்தொகுதிகளாக காணப்படுகின்றது என்பதை விரிவாக நோக்குவோம். நீரின் தரத்தை பேணுவதில் ஈர நிலங்கள் முக்கிய பங்கு வாகிக்கின்றன. ஈர நிலங்கள் இயற்கை நீர் சுத்திகரிப்பாளர்களாக செயல்படுகின்றன. நீரிலுள்ள மாசுத்துணிக்கைகளை வடிகட்டுகின்றன மற்றும் மேற்பரப்பு நீரிலுள்ள பல மாசுபடுத்திகளை உறுஞ்சுகின்றன. சில ஈரநில சூழற் தொகுதிகளில் இந்த சுத்திகரிப்பு செயற்ப்பாடானது, நிலத்தடி நீரின் தரத்தை உயர்த்துகின்றது.

ஈரநில சூழற்தொகுதியானது கடலோரங்களில் புயல் சேதத்தை குறைக்கின்றது. கடலோரங்களிலுள்ள ஈரநிலங்கள் மற்றும் சதுப்புநிலக் காடுகள் பெரும் புயல்களின் போது வெள்ளம், கடலோர அரிப்பு மற்றும் சொத்து சேதத்தை குறைக்கின்றன. ஈரநிலத் தாவரங்கள் கரையோர ஈரநிலங்களில் உள்ள மண்ணை பிணைப்பதன் மூலம் அதிக படியான மண்ணரிப்பை தடுக்கின்றன.

ஈரநிலங்கள் பல்வேறு உயிரினங்களுக்கு வாழிடமாக திகழ்கின்றன. மான், கரடி போன்ற பல விலங்குகள் பொதுவாக ஈரநிலங்களை உணவு மற்றும் உறைவிடத்திற்காக பயன்படுத்துகின்றன. ஈரநிலங்கள் பல இடம்பெயரும் பறவைகளுக்கு இன்றியமையாதது. வெள்ளம் சூழ்ந்த காடுகள், புல்வெளிகள் மற்றும் ஈரநிலங்களின் குளிர்காலம் இப்பறவைகளுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடமாக உள்ளது.

மீன்கள் மற்றும் ஜெலி மீன்களின் வாழிடமாக ஈரநிலங்கள் உள்ளன. பல்வேறு மீனினங்கள், இறால், நண்டு உள்ளிட்ட நன்னீர் மற்றும் கடல் கடல்வாழ் உயிரினங்கள், உணவிற்கு, வாழ்விடத்திற்கு, முட்டடையிடுவதற்கு, மற்றும் முதிர்ச்சியடைவதற்கு ஈரநிலங்களை சார்ந்துள்ளன. அச்சுறுத்தப்படட மற்றும் அழிந்து வரும் உயிரினகளுக்கான வாழிடமாகவும் ஈரநிலங்கள் காணப்படுகின்றன. ஈர நிலங்கள் பூமியில் உற்பத்தி திறன் கூடிய சுற்று சூழல் தொகுதிகளில் ஒன்றாகும். இவ்வாறு பல்வேறுபடட செய்யற்பாடுகளுக்கு முக்கியமான சூழல் தொகுதியாக ஈர நிலங்கள் திகழ்கின்றன. இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த ஈர நில சூழல் தொகுதி பல்வேறு அச்சுறுத்தல்களை சந்தித்து வருகிறது. 

ஈரநில சூழல் தொகுதி ஆபத்தில் இருப்பதால், உதவ நாம் என்ன செய்யலாம்?

முதலில் அச்சுறுத்தல்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சனத்தொகை வளர்ச்சியின் காரணமாக நகர்ப்புற விரிவாக்கம் ஈரநிலங்களில் செய்யப்படுகின்றது. பல்வேறுபட்ட தேவைகளுக்காக ஈரநிலங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது. கடல் நீர் ஈர நிலங்களில் உட்ப்புகாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஈர நிலங்களை பாதுக்காக்கும் திடடங்களில் பங்கு கொள்வதன் மூலம்அது மாசுபடுவதிலிருந்து குறைக்க முடியும். உள்ளூர் ஈர நிலங்களில் சூழல் சமநிலையை பாதுகாக்கும் மரங்களை நடுதல், சதுப்பு நிலங்களை மாசுபடுத்தும் இரசாயன உற்பத்தி பொருட்களின் பாவனையை குறைத்தல். இவ்வாறான  செயற்ப்பாடுகளின் மூலம் ஈர நிலங்களை ஆபத்தில் இருந்து பாதுகாக்க முடியும். இவ்வாறு பல்வேறுபாட்டட முக்கிய தொழிற்ப்பாடுகளை மேற்கொள்ளும் ஈர நிலன்களை பற்றி அறிந்து கொள்வதும், அவற்றினை சேதப்படுத்தாது பாதுக்காப்பதும் எங்கள் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.

Leave a Reply